பொது செய்தி

இந்தியா

மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட் நந்தா ஸ்ரீதர் பாராட்டு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதல்வர் ரங்க சாமி மாநில வளர்ச் சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நந்தா ஸ்ரீதர் கூறி உள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ரங்கசாமி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், பாட்கோவில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்தது

புதுச்சேரி : முதல்வர் ரங்க சாமி மாநில வளர்ச் சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நந்தா ஸ்ரீதர் கூறி உள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ரங்கசாமி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், பாட்கோவில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்தது பாராட்டுக்குரியது.பெட்ரோலுக்கான வாட் வரியில் 3 சதவீதம் குறைத்துள்ளதால் லிட்டருக்கு 2.43 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 2 மாத நிலுவை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.புதிய தொழிற்சாலைகளை திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதலீட்டாளர் மாநாடு அடுத்த மாதம் 23ல் நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.கோரிமேடு பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது.இந்த பட்ஜெட்டினால் விவசாயம், கல்வி, சுற்றுலா உள்பட 54 துறைகளில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். மாநில மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஓட்டு போட்ட மக்களின் நம்பிக்கையை முதல்வர் ரங்கசாமி முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X