சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகையை கொள்ளையடித்தவர்கள் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் வீடு புகுந்து பத்தரை சவரன் நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி நாராயணன் நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 30; இவர் மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 25ம் தேதி ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். சரண்ராஜ்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் வீடு புகுந்து பத்தரை சவரன் நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி நாராயணன் நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 30; இவர் மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 25ம் தேதி ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். சரண்ராஜ் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடித்து சென்ற போது வீட்டின் கதவு திறந்து, நகை பெட்டியில் வைத்திருந்த பத்தரை சவரன் நகைகள் திருடு போயிருந்தன. சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் சரண்ராஜ் வீட்டின் அருகே அடுத்தடுத்த வீடுகளில் வசித்த குமார் மகன் சக்கரவர்த்தி, 26; சசிக்குமார் மனைவி விஜயலட்சுமி, 37; ஆகியோரிடம் விசாரித்த போது நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து பத்தரை சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர். அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள் சேர்ந்து நகைகளை திருடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X