புதிதாக 96 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிதாக 96 பேருக்கு தொற்று

Added : ஆக 30, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4950 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரம் 394 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 100 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதை தொடர்ந்து குணமடைந்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மாநிலத்தில் நேற்று முன்தினம் 4950 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரம் 394 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 100 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதை தொடர்ந்து குணமடைந் தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 157 பேரும், வீட்டு தனிமையில் 535 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 61 வயது மூதாட்டி, புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த 65 வயது முதியவர் என இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 1812 ஆக உயர்ந்துள்ளது.தொற்று பாதிப்பு 1.94 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.47 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.97 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் பொது மக்கள் 2,134 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X