இந்தியா

சாலையோரம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்; தொலைநோக்கு திட்டம் வகுக்கப்படுமா?

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர் சாக்கடைகளில் கலந்து வீணாவதை தடுக்க, தொலைநோக்கு பார்வையுடன், சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் மற்ற மாநிலங்களை போன்று வற்றாத ஜீவநதிகள் இல்லை. குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரையே பெரிதும் சார்ந்துள்ளது.மாநிலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 1,200 மி.மீ., மழை பொழிகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை
 சாலையோரம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்;  தொலைநோக்கு திட்டம் வகுக்கப்படுமா?

புதுச்சேரி : சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர் சாக்கடைகளில் கலந்து வீணாவதை தடுக்க, தொலைநோக்கு பார்வையுடன், சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் மற்ற மாநிலங்களை போன்று வற்றாத ஜீவநதிகள் இல்லை.

குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரையே பெரிதும் சார்ந்துள்ளது.மாநிலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 1,200 மி.மீ., மழை பொழிகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த இந்த மழை நீரை அறுவடை செய்து, மண்ணில் சேமிக்க வேண்டியது அவசியம்.ஆனால் பெருமளவு மழை நீரை சேமிக்காமல், சாக்கடை மூலம் வீணாக கடலில் கலக்கிறது.

பெய்யும் மழை நீரில் ஓரளவு கடலில் கலக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், நமது மோசமான நீர் மேலாண்மையால், ஒட்டுமொத்த மழைநீரும் வீணாகக் கடலில் கலக்கிறது.வாய்க்கால்கள் மூலம் வீணாக கடலில் சென்று கலக்கும் மழைநீரை சேமித்தாலே பல ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்கலாம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்வதோடு, குடிநீர் உப்பு நீராவதை தடுக்க முடியும்.ஆனால், சாலைகளில் மழை நீரை சேகரிக்க எத்தகைய திட்டங்களும் இல்லை. ஒவ்வொரு சொட்டு மழை நீரும் பூமிக்குள் செல்லும் வகையில் சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.

சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீரை வடிகால் மூலம் நீர், குளங்கள், ஏரிகளுக்கு போகும் வகையில் வசதி செய்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். அப்படி முடியாவிட்டால், சாலையோரமே மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி, சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ப' மற்றும் 'எல்' வடிவ வாய்க்கால் மூலமாக, கடந்த காலங்களில் கழிவுநீர் வீடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.தற்போது நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதால், இந்த வாய்க்கால்களுக்கு வேலையில்லாமல் உள்ளது. இதனை சாலையோர மழை நீர் வடிகால் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற முடியும்.

நகரம் முழுவதும் தார் ரோடு, சிமென்ட் ரோடு, என கான்கிரீட் காடாக மாற்றப்பட்டு, நிலத்தடியில் நீர் நுழைய வாய்ப்பில்லாமல் போனதே எல்லா தண்ணீர் சிக்கலுக்கும் காரணமாக உள்ளது.நகரமே மிதக்கும் அளவுக்கு பருவமழை கொட்டித் தீர்த்தாலும், அதை பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறி வருகிறோம்.இதுபோன்ற சூழ்நிலையில் சாலைகளில் மழைநீர் சேமிப்புத் திட்டம் என்பது, ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் திட்ட மாகும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும்.மேலும், அதன்மூலம் கொசு உற்பத்தியையும்,

அதனால் நோய் பரவுவதையும் தடுக்க முடியும். அதற்கான விரிவான செயல் திட்டங்களை பொதுப்பணித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து, தேசிய நெடுஞ்சாலை, இணைந்து உருவாக்க வேண்டும்.'சாலையோரம் மழைநீர்சேகரிப்பு சாத்தியமே'புதுச்சேரியில் சாலையோரம் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வரும், வளரும் இளம் தலைமுறை அமைப்பின் தலைவரும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின முன்னாள் தலைவியுமான டாக்டர் தேவிபிரியா கூறியதாவது:சாலையில் தேங்கும் நீரை, சாக்கடைக்கு அனுப்பாமல், மண்ணில் சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதற்கான சிறப்பு திட்டத்தை தயாரித்து, கவர்னர், பொதுப்பணித் துறையின் பார்வைக்கு கடந்த 2016ம் ஆண்டு அனுப்பினேன்.அதன்பிறகு அதிகாரிகள் சந்தித்து பேசினர். லாஸ்பேட்டையில் பரிட்சார்த்த முறையில் துவங்கலாம் என்றனர். அதன் பிறகு அத்திட்டத்தை யாரும் பொருட்படுத்தவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.நாங்கள் சமர்ப்பித்துள்ள இத்திட்டத்தினால் சாலையில் ஐந்து வித நன்மைகள் கிடைக்கும். சாலையின் இருபுறமும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுவதோடு, பார்க்கிங் அல்லது நடைபாதை கிடைக்கும். பைப்லைன் புதைக்கப்படுவதால் சாலையை அடிக்கடி தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது.ஏதேனும் கேபிள் புதைக்க வேண்டுமெனில் அக்குழாயிலேயே கொண்டு செல்லலாம். அத்துடன் சாலையோரம் மரக்கன்றுகளை நடலாம்.நாங்கள் பரிந்துரைத்த மழை நீர் சேகரிப்பு குறித்த வரைவு திட்டத்தை, தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

இத்திட்டத்தின் சாதக, பாதக அம்சங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, புதிதாக சாலைகள் போடுவதற்கு முன்பாகவே செயல்படுத்துவது நலம் பயக்கும்.பொதுப்பணித்துறை பராமரிப்பில்741.788 கி.மீ., சாலைபுதுச்சேரி பிராந்தியத்தில் 64.966 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை, 33.514 கி.மீ., மாநில சாலைகள் உள்ளது. 324.761 கி.மீ., மாவட்ட சாலைகளும், 318.547 கி.மீ., கிராம சாலைகள் உள்ளன.மொத்தம், 741.788 கி.மீ., சாலைகள் புதுச்சேரி பொதுப்பணி துறையால் பராமரிக்கப்படுகிறது.இதுதவிர, நகராட்சிகள் கட்டுப்பாட்டில் 1051 கி.மீ., சாலைகளும், 1342 கி.மீ., சாலையை அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளும் பராமரித்து வருகின்றன.இந்த சாலைகள் மூலம் மழைக்காலங்களில் பல கோடி லிட்டர் நிலத்தடியில் சேமிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X