பொது செய்தி

இந்தியா

பாகூர் பகுதியில் திடீர் மழை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில், சொர்ணாவாரி பருவத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. பெரும்பாலான வயல்களில் நெற் கதிர்கள் வெளிவரத் துவங்கி
 பாகூர் பகுதியில் திடீர் மழை

பாகூர் : பாகூர் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில், சொர்ணாவாரி பருவத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. பெரும்பாலான வயல்களில் நெற் கதிர்கள் வெளிவரத் துவங்கி உள்ளது. சில வயல்களில் நெற்கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளன.கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந் தன. மேலும், மழைநீர் தேங்கியதால், அறுவடை பணி தடைபட்டது.வயலில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றுவதற்குள், கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்தது. இதனால், நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ளன.

நெற்கதிர்கள் முளைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:சொர்ணாவாரி பருவத்திற்கு குறைந்த அளவிலேயே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,500 விவசாயிகள், 2000 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், 430 விவசாயிகளின், 170 ஹெக்டேருக்கு மட்டுமே பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.தற்போது, பாகூர் பகுதியில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர் காப்பீட்டில் பதிவாகி உள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. உளுந்து, பச்சைப் பயிறு, மணிலா போன்ற பயிர்களுக்கும் காப்பீடு பதிவு செய்யவில்லை.

எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கிடவும், அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு கிடைத்திடவும் வேளாண் துறை அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X