சர்வதேச தடை நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வதேச தடை நீட்டிப்பு

Added : ஆக 30, 2021
Share
புதுடில்லி-நம் நாட்டில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நம் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் முதல் அனைத்து விதமான விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின், வைரசின் தீவிரம் குறையவே உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் மீண்டும் துவங்கப்பட்டன. எனினும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை

புதுடில்லி-நம் நாட்டில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நம் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் முதல் அனைத்து விதமான விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின், வைரசின் தீவிரம் குறையவே உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் மீண்டும் துவங்கப்பட்டன. எனினும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில் கொரோனா வைரஸ் சூழலை கருத்தில் வைத்து சர்வதேச விமான சேவைகளுக்கான தடை அடுத்த மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் சர்வதேச பயணியர் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.எனினும் சரக்கு விமான போக்குவரத்துக்கும், டி.ஜி.சி.ஏ., அனுமதியுடன் இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கும் எந்த தடையும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X