பொது செய்தி

தமிழ்நாடு

சரவணா நகர் இணைப்புச் சாலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் சரவணா நகர்-நத்தவெளி இணைப்புச் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கின்றனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் சரவணா நகர்-நத்தவெளி இணைப்புச் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை தரமாக அமைக்கவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்

கடலுார் : கடலுார் சரவணா நகர்-நத்தவெளி இணைப்புச் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கின்றனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் சரவணா நகர்-நத்தவெளி இணைப்புச் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை தரமாக அமைக்கவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளம் இருப்பது தெரியாமல் இரவில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X