பொது செய்தி

இந்தியா

காலாப்பட்டு மத்திய சிறையில் துணை கண்காணிப்பாளருக்கு மிரட்டல் 11 கைதிகள் மீது வழக்கு பதிவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளரை மிரட்டிய கைதிகள் 11 பேர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.காலாப்பட்டு மத்திய சிறையில், கொடூர கொலை கள், வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதான 17 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறை சட்டப்படி, குண்டாஸ் கைதிகள் தனி யார்டிலும், இளம் குற்றவாளிகள் தனி

புதுச்சேரி : மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளரை மிரட்டிய கைதிகள் 11 பேர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில், கொடூர கொலை கள், வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதான 17 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறை சட்டப்படி, குண்டாஸ் கைதிகள் தனி யார்டிலும், இளம் குற்றவாளிகள் தனி அறை, தண்டனை கைதிகள் தனி அறையில் அடைக்கப்பட வேண்டும்.காலாப்பட்டு சிறையில் தனித்தனி அறைகள் இல்லாததால், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என இரு பிரிவாக பிரித்து அடைத்துள்ளனர்.

விசாரணை கைதிகள் உள்ள ஒவ்வொரு அறையிலும் ஒரு குண்டாஸ் கைதி அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டாஸ் கைதிகள், விசாரணை கைதிகளை கழிவறை, அறையை சுத்தப்படுத்துதல் மற்றும் எடுபிடி வேலை செய்ய வைக்கின்றனர் என புகார் எழுந்தது.அதையடுத்து, குண்டாஸ் கைதிகள் 17 பேரையும் தனி யார்டுக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குண்டாஸ் கைதிகள், வேறு அறைக்கு மாற்றினால், ஜாதி ரீதியில் திட்டியதாகவும், தாக்கியதாகவும் நீதிமன்றத்தில் கூறுவோம் என சிறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரனை மிட்டி உள்ளனர்.பின்பு குண்டாஸ் கைதி சத்யா, ஜமால், விசாரணை கைதிகள் சுனில், கவுதம் ஆகிய 4 பேர் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.நால்வரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், சிறை கைதிகள் சத்யா, சுகன், ஜாமல், குறளரசன், விக்கி, சுந்தர், சாத்ராக், கலைச்செல்வன், அய்யப்பன், கிஷோர்குமார், கவுதம் ஆகிய 11 பேர் மீது காலாப்பட்டு போலீசார், வழக்கு பதிந்தனர் .

மிரட்டல், ஆபாசமாக திட்டுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.மூன்று கைதிகள் தற்கொலை முயற்சிசிறையில் உள்ள ரவுடிகள் ஜாதி ரீதியில் இணைந்து, தங்களை சிறை அதிகாரிகள் தாக்குவதாக கூறி, அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வாரத்தில் மட்டும், 11 கைதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிகிச்சைக்கு பிறகு சிறைக்கு திரும்பினர்.இந்த நிலையில் நேற்று காலை சிறை காவலர்கள் தங்களை தாக்குவதாக கூறி, சுகன், பசுபதி உள்ளிட்ட 3 கைதிகள் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X