பொது செய்தி

இந்தியா

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் தயார்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி, மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் கொள்முதல் செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல், பள்ளிகள் இயங்க உள்ளது. அரைநாள் மட்டுமே இயங்க உள்ளதால், மதிய உணவு வழங்கப் படாது, மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப் படாது என பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.திங்கள்,

புதுச்சேரி : பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி, மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் கொள்முதல் செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல், பள்ளிகள் இயங்க உள்ளது. அரைநாள் மட்டுமே இயங்க உள்ளதால், மதிய உணவு வழங்கப் படாது, மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப் படாது என பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் இயங்கும். செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடைபெறும்.பள்ளி திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் இன்றும், நாளையும் பள்ளிகளில் துவங்கப்பட உள்ளது.

வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து, சமூக இடைவெளிக்கான அடையாளம் இட உத்தரவிடப் பட்டுள்ளது.பள்ளி திறப்பினை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பாடப்புத்தகங்கள், முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X