பொது செய்தி

இந்தியா

சுருக்கு வலை பிரச்னையில் மோதல் இரு கிராம மீனவர்கள் ஆலோசனை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : சுருக்கு வலையை பயன்படுத்தி, மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரு கிராம மீனவர்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டிணம் - நல்லவாடு மீனவர்கள் இடையே நேற்று முன்தினம், புதுக்குப்பம் கடற்கரையில் மோதல் ஏற்பட்டது.தொடர்ந்து, வீராம்பட்டிணம், வம்பா கீரப்பாளையம்
 சுருக்கு வலை பிரச்னையில் மோதல்  இரு கிராம மீனவர்கள் ஆலோசனை

அரியாங்குப்பம் : சுருக்கு வலையை பயன்படுத்தி, மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரு கிராம மீனவர்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டிணம் - நல்லவாடு மீனவர்கள் இடையே நேற்று முன்தினம், புதுக்குப்பம் கடற்கரையில் மோதல் ஏற்பட்டது.தொடர்ந்து, வீராம்பட்டிணம், வம்பா கீரப்பாளையம் மீனவர்கள் இடையேயும் மோதல் வெடித்தது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, கும்பலை கலைத்தனர்.மோதலை தொடர்ந்து, வீராம்பட்டிணம், நல்ல வாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக மூன்று கிராமங்களை சேர்ந்த 900 பேர் மீது போலீ சார் வழக்கு பதிந்தனர்

.இப்பகுதிகளில் மேலும் மோதல் ஏற்படுவதை தடுக்க, ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, வீராம்பட்டிணம் - நல்லவாடு பகுதியில் மீனவர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்தினர்.வீராம்பட்டிணம் மீனவர்கள் நடத்திய கூட்டத்தில், சுருக்கு வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். நல்லவாடு பகுதியில் நடத்த கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில், நல்லவாடு மீனவர்களுக்கு தனியாக துறைமுகம் அமைத்து தரவேண்டும், வீராம்பட்டிணம் மீனவர்களால் சேதப்படுத்தப்பட்ட படகு, வலைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.மோதல் காரணமாக நேற்று வீராம்பட்டிணம், புதுக்குப்பம், நல்லவாடு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.நேற்று மாலை, மீன் வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீராம்பட்டிணம் மீனவர்களை நேரில் சந்தித்து பேசினர். வீராம்பட்டிணம் மற்றும் நல்வாடு பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X