பொது செய்தி

இந்தியா

தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி தனியார் பஸ்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், ரூ. 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு பஸ் கட்ட ணம் உயர்த்தப்பட்டது. சாதாரண பஸ்சில் பயணம் செய்ய, ஒரு கி.மீ.,க்கு 58 பைசா வீதம், குறைந்த பட்சமாக 10 கி.மீ., வரை ரூ.7 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு கி.மீ., அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்

புதுச்சேரி : புதுச்சேரி தனியார் பஸ்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், ரூ. 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு பஸ் கட்ட ணம் உயர்த்தப்பட்டது. சாதாரண பஸ்சில் பயணம் செய்ய, ஒரு கி.மீ.,க்கு 58 பைசா வீதம், குறைந்த பட்சமாக 10 கி.மீ., வரை ரூ.7 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு கி.மீ., அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு இயங்க துவங்கிய தனியார் பஸ்கள், டீசல் உயர்வை காரணம் காட்டி, தன்னிச்சையாக பஸ் கட்டணத்தை உயர்த்திக் கொண்டன.குறைந்தபட்ச கட்டணம் ரூ. 7க்கு பதிலாக, தற்போது ரூ.10 வசூலிக்கின்றனர்.அதே நேரத்தில், பி.ஆர்.டி.சி. பஸ்களில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வால் கூலி வேலை, கட்டட வேலை, துப்புரவு, தனியார் கம்பெனி வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X