சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நல்லவாடு மீனவர்களை திருப்பி அனுப்பிய போலீஸ் கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கடலுார் : சுருக்குமடி வலையுடன் கடலுார் துறைமுகத்துக்கு வந்த நல்லவாடு மீனவர்களை, போலீசார் திருப்பி அனுப்பினர்.புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அருகிலுள்ள, தமிழக பகுதியான நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக, வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களிடையே மோதல்

கடலுார் : சுருக்குமடி வலையுடன் கடலுார் துறைமுகத்துக்கு வந்த நல்லவாடு மீனவர்களை, போலீசார் திருப்பி அனுப்பினர்.

புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அருகிலுள்ள, தமிழக பகுதியான நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக, வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களிடையே மோதல் நிலவி வருகிறது.இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் வீராம்பட்டினம் அருகே மீன் பிடித்தனர்.

இதற்கு, வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, இரு கிராம மீனவர்களும் தாக்கிக் கொண்டனர். போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, கலைந்து போக செய்தனர். இதையடுத்து, வீராம்பட்டிணம் மீனவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என கருதி, படகு மற்றும் சுருக்குமடி வலைகளை பாதுகாப்பாக வைக்க அருகில் உள்ள கடலுார் துறைமுகத்திற்கு நல்லவாடு மீனவர்கள் நேற்று வந்தனர்.எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவின்பேரில் போலீசார் துறைமுகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

முகத்துவாரம் பகுதிக்கு வந்த மீனவர்களை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால், மீனவர்கள் நல்லவாடு கிராமத்திற்கு திரும்பினர். மீதமுள்ள மீனவர்கள் பூம்புகாருக்கு சென்றனர்.அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் வஜ்ரா வாகனத்துடன் நல்லவாடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையோர கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.10 பேர் மீது வழக்குஆத்திரமடைந்த மீனவர்கள், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன், மகிவர்மன், சத்யராஜ், மணிவண்ணன், மதன் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X