பொது செய்தி

தமிழ்நாடு

மாடூர் சுங்கச் சாவடியில் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச் சாவடியில் வரும் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச் சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டண விபரம் (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்):கார், வேன்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச் சாவடியில் வரும் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச் சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டண விபரம் (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்):கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை செல்ல 50 ரூபாயும், 24 மணி நேரத்திற்குள் பல முறை பயணிக்க 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.ஆனால் மாதாந்திர கட்டணம் 1,575 ரூபாய் (1,555). சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 90 ரூபாயில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த வாகனங்கள் 24 மணி நேரத்திற்குள் பலமுறை பயணிக்க 140 (135), மாதாந்திர கட்டணம் 2,755 (2,720).பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை செல்ல 185 (180), 24 மணி நேரத்திற்குள் பல முறை செல்ல 275 (270), மாதாந்திர கட்டணம் 5,510 (5,440).கனரக அச்சு வாகனங்கள் ஒரு முறை செல்ல 295 (290), 24 மணி நேரத்திற்குள் பல முறை செல்ல 445 (435), மாதாந்திர கட்டணம் 8,855 (8,740) உயர்த்தப்பட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X