சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி உடலை தர மறுத்ததால் பரபரப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திட்டக்குடி : ராமநத்தம் அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை பரிசோதனை செய்ய போலீசாரிடம் தர பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் அருண்,9; நேற்று மதியம் 3 மணிக்கு அதே பகுதியிலுள்ள அரங்கூர் ஏரிக்கு

திட்டக்குடி : ராமநத்தம் அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை பரிசோதனை செய்ய போலீசாரிடம் தர பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் அருண்,9; நேற்று மதியம் 3 மணிக்கு அதே பகுதியிலுள்ள அரங்கூர் ஏரிக்கு நண்பர்களுடன் மீன்பிடிக்கச்சென்றார். அப்போது ஏரியிலிருந்த பள்ளத்தில் சிறுவன் மூழ்கினார்.

உடனிருந்த சிறுவர்கள் ஓடிவந்து கிராமத்திலுள்ளவர்களிடம் தெரிவித்தனர். சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏரியில் தேடினர். 4 மணிக்கு சிறுவனின் உடல் கிடைத்தது. தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். வழக்குப்பதிந்து பரிசோதனைக்கு சிறுவன் உடலை எடுத்துச் செல்ல பெற்றோர் தர மறுத்தனர்.

ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசியும் உடலை பெற முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இறந்த சிறுவனின் பெற்றோரை சமாதானம் செய்து, இரவு 8.15 மணிக்கு சிறுவனின் உடலைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X