பொது செய்தி

தமிழ்நாடு

பைக் மீது வேன் மோதி விபத்து கணவன், மனைவி பரிதாப சாவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே, பைக் மீது, வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தம்பதியினரின் கிராமத்தை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார்- சிதம்பரம் சாலையில், 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 50; இவரது மனைவி

பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே, பைக் மீது, வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தம்பதியினரின் கிராமத்தை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார்- சிதம்பரம் சாலையில், 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 50; இவரது மனைவி ஆரியமாலா, 42; இருவரும் நேற்று பைக்கில், ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் இருந்து கடலுார் குடிகாடு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு 5 கண் மதகு அருகே மாலை 4 மணிக்கு வந்த போது, சிதம்பரத்தில் இருந்து கடலுார் சென்ற மகேந்திரா வேன், முன் பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம், ஆரியமாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.புதுச்சத்திரம் போலீசார் சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த, ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியப்பட்டு 5 கண் மதகு அருகே திரண்டு 4.10 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மாலை 4.20 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் கடலுாரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் தேவி (பொறுப்பு) வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X