தமிழ்நாடு

கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து கடலுார், தஞ்சை, மயிலாடுதுறை டெல்டா பாசனத்திற்கு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.கடலுார், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் கீழணை காவிரி பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதியும்,
 கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து கடலுார், தஞ்சை, மயிலாடுதுறை டெல்டா பாசனத்திற்கு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

கடலுார், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் கீழணை காவிரி பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதியும், கல்லணையில் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டன. கீழணைக்கு 26ம் தேதி தண்ணீர் வந்தது. கல்லணையில் கடந்த 11ம் தேதி முதல் கூடுதலாக தண்ணீர் திறந்ததால், வடவாற்றில் தண்ணீர் திறந்து வீராணம் ஏரி கடந்த 24ம் தேதி நிரம்பியது. தற்போது கல்லணையிலிருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் 508 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் நீர் மட்டம் 8.70 அடியாக உள்ளது.இந்நிலையில், கடலுார் மாவட்டம் வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கி மன்னியாறு, விநாயகன் வாய்க்கால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அணைக்கரை கீழணையில் நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்தது. தெற்கு கொள்ளிடம் பகுதி தெற்கு ராஜன் வாய்க்கால் மதகில் நடந்த நிகழ்ச்சிக்கு கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பற்கேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

பின், கொள்ளிடம் ஆறு வடக்கு பகுதியில் வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு ஆகியவற்றில் தண்ணீர் திறந்தார்.நேற்று வடவாற்றில் 600 கன அடி, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்காலில் தலா 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன. பின், வீராணம் ஏரி பாசனத்திற்கு கந்தகுமாரன் ராதா வாய்க்கால் மதகில் இருந்து தண்ணீர் திறந்தார். இதன் மூலம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை மற்றும் வடவாறு ஆகியவை மூலம் 47 ஆயிரத்து 997 ஏக்கர். தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார், விநாயகன் தெரு வாய்க்கால் மூலம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் உட்பட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறுகிறது.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், அமைச்சர் கணேசன், மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், சீர்காழி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை வெள்ளாறு வடிநில கோட்ட நீர் ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் சாம்ராஜ், அணைக்கரை எஸ்.டி.ஓ., அருணகிரி, வீராணம் ஏரி உதவி இன்ஜினியர் சரவணன், உதவி பொறியாளர்கள் வெற்றிவேல், சுரேஷ், முத்துக்குமார், சக்திவேல், கடலுார் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன், கூடுதல் இயக்குனர்கள் ரமேஷ், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அரியலுார் அமைச்சர், கலெக்டர் மிஸ்சிங்! கீழணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அரியலுார் மாவட்ட அமைச்சர் சிவசங்கரன், கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அரியலுார் மாவட்டத்தில் இருந்து யாரும் பங்கேற்காதது விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X