30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன்,-ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, அதிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இவர்களுக்கு தஞ்சம் அளித்து வருகின்றன.இந்நிலையில் காபூலில்
 30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்

லண்டன்,-ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, அதிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இவர்களுக்கு தஞ்சம் அளித்து வருகின்றன.இந்நிலையில் காபூலில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் நகரம் நோக்கி, துருக்கி நாட்டு விமானம் சமீபத்தில் புறப்பட்டது.அதில் சோமன் நுாரி, 26 என்ற நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவர் தாஜ் முகமது ஹம்மத், 30, ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தனர். மேற்காசிய நாடான குவைத் வான்வெளியில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது, சோமன் நுாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விமானத்தில் டாக்டர் இல்லாததால், விமான ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிமிட போராட்டத்துக்கு பின் அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ஹவ்வா என பெயரிடப்பட்டது.தற்காப்பு நடவடிக்கையாக குவைத்தில் தரை இறங்கிய விமானம், பின் பிர்மிங்காம் சென்றடைந்தது.சமீபத்தில் காபூலில் இருந்து ஜெர்மனி நோக்கி பயணித்த அமெரிக்க ராணுவ விமானத்திலும், கர்ப்பிணி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
31-ஆக-202112:34:24 IST Report Abuse
Yesappa இதல்லாம் ஒரு சாதனை? அல்றேடி இரு குழந்தைகள். இப்போது இன்னும் ஒன்று? அடைக்கலம் கொடுக்கும் நாட்டை மூச்சு திணற விடாதீர்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X