மைசூரில் மாணவி பாலியல் பலாத்காரம் மேலும் இருவரை தேடும் போலீசார்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மைசூரு-மைசூரில் எம்.பி.ஏ., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவர், 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.அந்த குற்றத்தில் ஏழு பேர் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளதால், மற்ற இருவரை பிடிக்க, மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கர்நாடகாவின் மைசூரு நகரில் சமீபத்தில்

மைசூரு-மைசூரில் எம்.பி.ஏ., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவர், 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.அந்த குற்றத்தில் ஏழு பேர் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளதால், மற்ற இருவரை பிடிக்க, மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கர்நாடகாவின் மைசூரு நகரில் சமீபத்தில் சாமுண்டி மலை அடிவாரத்தில் ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்த எம்.பி.ஏ., படிக்கும் மாணவியை, மர்ம நபர்கள்கும்பலமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.ஐந்து பேர் கைதுஇந்த கொடூர குற்றம் தொடர்பாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மைசூரு அழைத்து வந்தனர். ஐவரையும், மைசூரு 3ம் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் நீதிபதிசந்தேஷ் பண்டாரி முன், நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி, 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.மருத்துவ பரிசோதனைஅவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. மைசூரில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் உள்ள தடய வியல் ஆய்வகத்துக்கு, பரிசோதனை மாதிரிகள் அனுப்பப்பட்டன.இதன் பின், மற்றொரு ரகசிய இடத்துக்கு அவர்களை அழைத்து சென்று, தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.

அப்போது, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் ஆறு பேர் அல்ல, ஏழு பேர் என்பது தெரிந்தது. அந்த இருவர் எங்குள்ளனர்; அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அவர்களை கைது செய்ய, மூன்று சிறப்பு படைகள் தமிழகம் விரைந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X