முதல் தலைமுறை பட்டதாரிகள் கண்ணகி நகரில் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் தலைமுறை பட்டதாரிகள் கண்ணகி நகரில் அதிகரிப்பு

Added : ஆக 30, 2021
Share
கண்ணகி நகர் : தன்னார்வலர்கள் உதவியால், கண்ணகி நகரில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து 703 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் கல்வியில் பின்தங்கி இருந்தனர்.தன்னார்வலர்கள் உதவியால், தற்போதைய தலைமுறை மாணவர்கள், உயர்கல்வி செல்லும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த
 முதல் தலைமுறை பட்டதாரிகள் கண்ணகி நகரில் அதிகரிப்பு

கண்ணகி நகர் : தன்னார்வலர்கள் உதவியால், கண்ணகி நகரில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து 703 வீடுகள் உள்ளன.

இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் கல்வியில் பின்தங்கி இருந்தனர்.தன்னார்வலர்கள் உதவியால், தற்போதைய தலைமுறை மாணவர்கள், உயர்கல்வி செல்லும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லுாரி செல்ல மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.அதுவும், முதல் தலைமுறை பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில், படிக்க வசதி இல்லாத 10 பேருக்கு, அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில், தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், அவர்கள் படிப்புக்கு உதவும் வகையிலும், அறிவியல் பூர்வமாக சிந்திக்கவும், கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மையம், அண்ணா நுாலகம் அழைத்து செல்லப்பட்டனர்.மொத்தம் 36 மாணவ - மாணவியர் சென்றனர். இதில் 31 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இவர்கள், விரும்பும் படிப்பு படிக்க வேண்டிய வசதிகளை, தன்னார்வலர்கள் செய்ய முன்வந்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X