பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம் ஆர்ஆர். கோபால்ஜி பேச்சு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
திருச்சி: தமிழக கோயில்களில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத, உள்துறை பணியாளர்களாக, தெய்வீக பணிகளில் ஈடுபட்டிருக்கும், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், மடப்பள்ளி ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு

திருச்சி: தமிழக கோயில்களில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத, உள்துறை பணியாளர்களாக, தெய்வீக பணிகளில் ஈடுபட்டிருக்கும், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், மடப்பள்ளி ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜியின் தலைமையில்,'தெய்வீக கைங்கர்ய பேரவை' என்ற அமைப்பின் கீழ் இணைந்துள்ளனர்.



latest tamil news



'தெய்வீக கைங்கர்ய பேரவை'யின் முதலாவது ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், மாநிலத் தலைவர் ஆர்

ஆர்.கோபால்ஜி தலைமை வகித்து பேசியதாவது:தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் பாரம்பரியமாக கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், மடப்பள்ளி சிப்பந்திகள் மற்றும் உள்துறை பணியாளர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஹிந்து சமய வழிபாட்டு முறைகளில் தலையிடமாட்டோம்' என்று கூறியிருந்தார். ஆனால், செயல்பாடு மாறுபாடாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை, கோயில்களில் பணியாற்றும் உள்துறை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மட்டுமே சவால்களை சந்தித்து, தங்கள் குறிக்கோளில் வெற்றி காண முடியும்.ஒரே நோக்கமிருந்தும் பல்வேறு சங்கங்களாகவும், அமைப்புகளாகவும் செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த தெய்வீக கைங்கர்ய பேரவை ஏற்படுத்தப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் கோயில் பணியாளர்கள், தங்களுக்குள் பேதம் பார்க்காமல், ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வெற்றிபெற முடியும். வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை சிவபுரம் வேதாகமபாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவாசங்கத் துணைத்தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்துபரிஷத் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
30-ஆக-202119:29:51 IST Report Abuse
balakrishnan ஹிந்துக்கள் ஒற்றுமை அடைய இது ஒரு நல்ல துவக்கம் .
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
31-ஆக-202110:10:01 IST Report Abuse
எதிர்க்குரல் ஆமாம் ஆமாம் எல்லா ஹிந்துக்களும் ஆதிக்கத்திற்கு எதிரா ஒன்னு கூடிட்டானுவ.....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
30-ஆக-202116:23:52 IST Report Abuse
ஜெயந்தன் இங்கே ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதமாகத்தான் பார்க்கப்படுகிறது...அதில் உயந்தது தாழ்ந்தது என்ற பிரிவினை வேறு.. இந்துக்கள் ஒண்றிணைய வேண்டும் என்றால் இதை மாற்றினால் மட்டுமே முடியும்..
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-ஆக-202115:42:50 IST Report Abuse
Svs Yaadum oore இந்த அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே ஆரியன் திராவிடன் என்று திசை திருப்பும் பூச்சாண்டி வேலையெல்லாம் இனிமேல் எடுபடாது. கோவில் மதம் பற்றி கேவலமாக பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அணைத்து சாதியினரும் அர்ச்சகரானால் நிச்சயம் இந்து மதம் வளர்ச்சி பெருமாம் . இதை சொல்வது யாரு , என்று பார்த்தால் அவர்கள் நோக்கம் புரியும் . தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது , ஹிந்து என்ற வார்த்தையே தமிழில் கிடையாது , ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னவன் . இவனுங்க அர்ச்சகர் நியமனம் செய்வானுங்களாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X