சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைத்துனியை போதையில் தாக்கியவர் தலைமறைவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருநீர்மலை : திருநீர்மலையில், மது போதையில் காய் வெட்டும் கத்தியால் மைத்துனியை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநீர்மலை, சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29. அவரது மனைவி ஜெனிபர். அவர்களுக்கு இசக்கி, ராகவா என்ற மகனும், முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால், ஜெனிபர் கோபித்துக்கொண்டு, ஒரு

திருநீர்மலை : திருநீர்மலையில், மது போதையில் காய் வெட்டும் கத்தியால் மைத்துனியை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநீர்மலை, சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29. அவரது மனைவி ஜெனிபர். அவர்களுக்கு இசக்கி, ராகவா என்ற மகனும், முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால், ஜெனிபர் கோபித்துக்கொண்டு, ஒரு மாதத்திற்கு முன், கணவரை பிரிந்து அப்பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்

. இந்நிலையில், 27ம் தேதி போதையில் இருந்த பாலகிருஷ்ணன், மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறு செய்தார்.ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தான் வைத்திருந்த, காய் வெட்டும் கத்தியை எடுத்து, மனைவியை தாக்க முயன்றார். அப்போது, தடுக்க முயன்ற ஜெனிபரின் தங்கை குளோரியின் தலையில் கத்தி பட்டு, கீறல் விழுந்தது. இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, மைத்துனியை தாக்கிய பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X