பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிடலின்றி கட்டப்பட்ட வடிகால் ராயலா நகரில் தேங்குது மழை நீர்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமாபுரம் : ராயலா நகரில், முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட மழை நீர் வடிகாலால், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம், 155வது வார்டில் ராயலா நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில், மழையின்போது, தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால், ராயலா நகர் 1

ராமாபுரம் : ராயலா நகரில், முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட மழை நீர் வடிகாலால், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம், 155வது வார்டில் ராயலா நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில், மழையின்போது, தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால், ராயலா நகர் 1 மற்றும் 2வது பிரதான சாலை வழியாக, அடையாற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டன.ஆனால், வடிகால் இருந்தும், ஒவ்வொரு மழைக்கும் ராயலா நகர், 1 மற்றும் 2வது பிரதான சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கமாகி உள்ளது.

மாநகராட்சி முறையான திட்டமிடல் இன்றி, மழை நீர் வடிகால் கட்டியதே இதற்கு காரணம் என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தற்போது, சென்னையில் பரவலாக பெய்து வரும் மழையில், இந்த இரு சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகளில் புகுந்துள்ளன.மழைநீர் வடிகால் இருந்தும், மழை நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X