வாடகைதாரர் விபரம் தெரியப்படுத்த உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடகைதாரர் விபரம் தெரியப்படுத்த உத்தரவு

Added : ஆக 30, 2021
Share
சென்னை-'சென்னையில், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விபரங்களை, அக்., 26க்குள், அந்தந்த காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய குற்றவியல் சட்டம் - 144ன்படி, உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விபரங்களை, காவல் துறைக்கு

சென்னை-'சென்னையில், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விபரங்களை, அக்., 26க்குள், அந்தந்த காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய குற்றவியல் சட்டம் - 144ன்படி, உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விபரங்களை, காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன்படி, தங்கள் வீடுகளில் வாடகைக்கு இருப்போர் குறித்த விபரங்களை, அக்., 26ம் தேதிக்குள், அந்தந்த காவல் நிலையத்தில் தெரிவிப்பது அவசியம். எனவே, 60 நாட்களுக்குள் தவறாமல், வாடகைதாரர் குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X