பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விற்பனை மந்தம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோயம்பேடு,-கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி என, சுப தினங்கள் அடுத்தடுத்து வந்தும், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதால் அதன் விலையும் சரிந்துள்ளது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அண்டை மாநிலங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.அதிருப்திபொதுவாக ஆவணி

கோயம்பேடு,-கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி என, சுப தினங்கள் அடுத்தடுத்து வந்தும், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதால் அதன் விலையும் சரிந்துள்ளது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அண்டை மாநிலங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.அதிருப்திபொதுவாக ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகைகள் அதிகம் வருவதால் பூக்கள் தேவை அதிகரிக்கும். இதனால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கெடுபிடிகளின் காரணமாக, திருமணங்களில் அதிக அளவு பூக்கள் பயன்படுத்தப்படுவதில்லை.அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமை களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், பூக்கள் விற்பனையில் மந்த நிலை நிலவுவதாக வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துஉள்ளனர். தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் கன மழை பெய்வதால், அங்கிருந்து வரும் பூக்கள் நனைந்து வீணாகின்றன. நேற்று கிருத்திகை, இன்று கிருஷ்ண ஜெயந்தி என, சுப தினங்கள் இருந்தும், கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், பூக்கள் விற்பனையாகாமல் அதன் விலையும் சரிந்துள்ளது. சூடு பிடிக்கும்கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு ஓசூரில் இருந்து 22 லாரிகளில் நேற்று சாமந்தி பூ வந்தது. மழையில் நனைந்த ஒரு லாரி சாமந்தி பூ குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியின் போது, அரசு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டால், பூ வியாபாரம் சூடு பிடிக்கும் என, வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X