சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 சிறுமியரிடம் அத்துமீறல் தாய், கள்ளக்காதலன் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை--சென்னையைச் சேர்ந்த மூன்று சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், சித்தியும் கைதாகினர். அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா, 30. இவருக்கும் பெருமாள், 48, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.'வீடியோ' பதிவுஇதை பயன்படுத்திய பெருமாள், ஷீலாவின் 9 வயது மகளிடம்,

சென்னை--சென்னையைச் சேர்ந்த மூன்று சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், சித்தியும் கைதாகினர். அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா, 30. இவருக்கும் பெருமாள், 48, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.'வீடியோ' பதிவுஇதை பயன்படுத்திய பெருமாள், ஷீலாவின் 9 வயது மகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். சிறுமியின் 11 வயது தோழியிடமும் 'காமக்கொடூரன்' பெருமாள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.ஷீலாவின் தங்கை மகளான 4 வயது சிறுமியிடமும் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.இதை, பெருமாள் தன் 'மொபைல் போனில் வீடியோ'வாக பதிவு செய்து வைத்து மிரட்டியுள்ளார். இதை அறிந்த அப்பகுதி மக்கள், டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.குழந்தைகள் சம்பந்தப்பட்ட புகார் என்பதால், கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. நேற்று சிறுமியின் தாய், சித்தி, பெருமாள் ஆகிய மூவரிடமும், பாதிக்கப்பட்ட சிறுமியரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில், சிறுமியரிடம், பெருமாள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, பெருமாள், சிறுமியின் தாய், சித்தி, ஆகிய மூவரும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.ரவுடிக்கு 'போக்சோ'மண்ணடி, கோபால் தெரு, பிளாட்பாரத்தில் வசிக்கும் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 40; பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர்.நேற்று குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, தியாகராஜன் சாக்லேட் வாங்கி கொடுத்து, துாக்கி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் குழந்தையை கண்டுபிடித்த பெற்றோர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தியாகராஜனை நையப்புடைந்தனர்.பின், துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 'போக்சோ' சட்டத்தில் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X