சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4.11 லட்சம் மோசடி: ஐ.டி., ஊழியர் புகார்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பீர்க்கன்காரணை,--நுாதன முறையில், ஐ.டி., ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.புதுபெருங்களத்துார், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 31; ஐ.டி., ஊழியர். இவர், தன் மொபைலில் 'நெட் பேங்கிங்' வசதி வைத்துள்ளார்.இம்மாதம் 23ம் தேதி, பாபுவின் மொபைல் போனுக்கு ஒரு 'லிங்க்' வந்துள்ளது. அதை தொட்டவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்த

பீர்க்கன்காரணை,--நுாதன முறையில், ஐ.டி., ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.புதுபெருங்களத்துார், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 31; ஐ.டி., ஊழியர். இவர், தன் மொபைலில் 'நெட் பேங்கிங்' வசதி வைத்துள்ளார்.இம்மாதம் 23ம் தேதி, பாபுவின் மொபைல் போனுக்கு ஒரு 'லிங்க்' வந்துள்ளது. அதை தொட்டவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்த 4.11 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.பின், 24ம் தேதி, 'ஆன்லைன்' வாயிலாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார். அந்த புகார், தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது.சைபர் கிரைம் போலீசார், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர். இதன்படி, பாபு நேற்று முன்தினம் இரவு, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இது குறித்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X