பூங்காவில் கஞ்சா கும்பல் அட்டகாசம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை : பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, தர்ஹா சாலை, சித்ரா 'டவுன் ஷிப்'பில், நுாற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு மத்தியில், நகராட்சி பூங்கா உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.இங்கு 24 மணி நேரமும் சமூக விரோதிகள் கஞ்சா புகைக்கின்றனர். மது 'பார்' கவும் மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும்

சென்னை : பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, தர்ஹா சாலை, சித்ரா 'டவுன் ஷிப்'பில், நுாற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிக்கு மத்தியில், நகராட்சி பூங்கா உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.இங்கு 24 மணி நேரமும் சமூக விரோதிகள் கஞ்சா புகைக்கின்றனர். மது 'பார்' கவும் மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பல்லாவரம் போலீசில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை.

இதை கண்டுகொள்ளாமல் விட்டால் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே, காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X