பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் வாலிபரின் உடைமையை மீட்டு தந்த சென்னை போலீசார்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை--சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஓட்டலில் தவறவிட்ட, 74 ஆயிரம் ரூபாய் மற்றும் 'ஐ பேடு' ஆகியவற்றை, போலீசார் உரிய நேரத்தில் மீட்டு கொடுத்தனர்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன், 28. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம், அலுவல் பணி காரணமாக சென்னை வந்தார். மாலை 4:00 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட

சைதாப்பேட்டை--சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஓட்டலில் தவறவிட்ட, 74 ஆயிரம் ரூபாய் மற்றும் 'ஐ பேடு' ஆகியவற்றை, போலீசார் உரிய நேரத்தில் மீட்டு கொடுத்தனர்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன், 28. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம், அலுவல் பணி காரணமாக சென்னை வந்தார். மாலை 4:00 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார்.அங்கு, அவரது தோள் பையை மறந்து வைத்து சென்றார். சேலம் பஸ் ஏறி, உளுந்துார்பேட்டை சென்றபோது தோள் பையை, ஓட்டலில் மறந்து வைத்தது தெரிந்தது.பையில், 74 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு 'ஆப்பிள்' நிறுவன ஐ - பேடு இருந்ததால் பதற்றம் அடைந்தார். பின், பஸ்சில் இருந்து இறங்கி, சைதாப்பேட்டை காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தார்.உடனே, காவலர் செந்தில் கேசன், சர்வேஸ்வரன் கூறிய அடையாளத்தை வைத்து, ஓட்டலுக்கு சென்று ஊழியர்களிடம் விசாரித்தார்.அப்போது, ஊழியர்கள் பையை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்தது தெரிந்தது.சர்வேஸ்வரன் கூறிய பணம், ஐ - பேடு ஆகியவை பையில் இருந்தன. இதையடுத்து, நேற்று அதிகாலை சைதாப்பேட்டை காவல் நிலையம் வந்த சர்வேஸ்வரன், எழுதி கொடுத்துவிட்டு, பணம், ஐ - பேடை பெற்று சென்றார்.உரிய நேரத்தில், உடைமைகளை மீட்டு கொடுத்த போலீசாருக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X