சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் வாங்கி தருவதாக நுாதன முறையில் மோசடி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சேலையூர்--தாம்பரம் அடுத்த நுாத்தஞ்சேரி, ஜோதி நகரை சேர்ந்தவர் ராணி, 45. இவர், அகரம் தென் பகுதியை சேர்ந்த புஷ்பா, 47, என்பவரிடம், ஆயிரம் ரூபாய் கட்டினால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி தருவதாக கூறினார்.இதை நம்பிய புஷ்பா, தன் சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 130க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து, 2.63 லட்சம் ரூபாயை

சேலையூர்--தாம்பரம் அடுத்த நுாத்தஞ்சேரி, ஜோதி நகரை சேர்ந்தவர் ராணி, 45. இவர், அகரம் தென் பகுதியை சேர்ந்த புஷ்பா, 47, என்பவரிடம், ஆயிரம் ரூபாய் கட்டினால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி தருவதாக கூறினார்.இதை நம்பிய புஷ்பா, தன் சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 130க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து, 2.63 லட்சம் ரூபாயை ராணியிடம் கொடுத்தார். ஆனால், ராணி சொன்னபடி கடன் வாங்கி கொடுக்காததுடன், பணத்தை திருப்பி கேட்டவர்களிடம் பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றினார்.இந்நிலையில் நேற்று, ராணி தன் வீட்டை காலி செய்து தப்ப முயன்றதாக தகவல் பரவியுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நுாத்தஞ்சேரியில் வீட்டில் இருந்த ராணியை பிடித்து, சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதே போல், மேலும் பலரிடம் அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X