சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பொருள் விற்பனை அரும்பாக்கத்தில் இருவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை : அரும்பாக்கம், ஆக. ௩௦-பிரபல நிறுவனத்தின் பெயரில், போலியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மொபைல் போன் கடை உரிமையாளர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகர் பிரதான சாலையில் இயங்கி வரும் மொபைல் போன் கடையின் உரிமையாளர்கள், பிரபல நிறுவனத்தின் பெயரில், போலி பொருட்களை விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று, சம்பந்தப்பட்ட

சென்னை : அரும்பாக்கம், ஆக. ௩௦-பிரபல நிறுவனத்தின் பெயரில், போலியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மொபைல் போன் கடை உரிமையாளர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகர் பிரதான சாலையில் இயங்கி வரும் மொபைல் போன் கடையின் உரிமையாளர்கள், பிரபல நிறுவனத்தின் பெயரில், போலி பொருட்களை விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று, சம்பந்தப்பட்ட இரண்டு மொபைல் போன் விற்பனை கடைகளிலும், அமைந்தகரை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில், விலை உயர்ந்த மொபைல் போன் நிறுவனத்தின் பெயரில், போலியான பொருட்கள் விற்பனை செய்து வந்ததை, கடையின் உரிமையாளர்களான சீனிவாசன், 30, திருக்குமார், 34, ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டனர்.இருவரையும் கைது செய்த போலீசார், போலியான பொருட்களை பறிமுதல் செய்தனர். பின் இருவரும், காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X