பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஓ.சி., வழங்கிய நடும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
தண்டையார்பேட்டை,--ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில் மாநகராட்சிக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடும் பணிகளில், தண்டையார்பேட்டை மாநகராட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.'பசுமை சென்னை' என்ற கருப்பொருளை மையமாக வைத்து தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சியினர் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு

தண்டையார்பேட்டை,--ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில் மாநகராட்சிக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடும் பணிகளில், தண்டையார்பேட்டை மாநகராட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.'பசுமை சென்னை' என்ற கருப்பொருளை மையமாக வைத்து தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சியினர் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.அந்த வகையில், தண்டையார்பேட்டை பகுதியில் பசுமை உருவாக்கும் வகையில், ஐ.ஓ.சி., நிறுவனம், எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து, 10 அடி உயரமுள்ள 1,000 மரக்கன்றுகளை தண்டையார்பேட்டை மாநகராட்சியினரிடம் வழங்கின.பாதாம், இயல்வாகை, நாவல், அரசமரம், வேம்பு, மாமரம், புங்கை, மலைவேம்பு, பலா, பப்பாளி, கொய்யா, சீதா, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்று வகைகள் இதில் இடம் பெற்றிருந்தன.தற்போது, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, தண்டயார்பேட்டை, நேதாஜி நகர், கெனால் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்து வருவதாக, மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X