பொது செய்தி

தமிழ்நாடு

அடர்வனம் அமைப்பதில் இளம் தலைமுறை ஆர்வம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரி, பெருங்குடி பகுதியில், தன்னார்வலர்கள் சேர்ந்து அடர்வனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வேளச்சேரி பசுமை அறக்கட்டளை சார்பில், நேற்று பெருங்குடி ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள, அரசு திறந்தவெளி இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.'எக்ஸ்னோரா, ரோட்டரி கிளப்' மற்றும்

வேளச்சேரி : வேளச்சேரி, பெருங்குடி பகுதியில், தன்னார்வலர்கள் சேர்ந்து அடர்வனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
வேளச்சேரி பசுமை அறக்கட்டளை சார்பில், நேற்று பெருங்குடி ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள, அரசு திறந்தவெளி இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.'எக்ஸ்னோரா, ரோட்டரி கிளப்' மற்றும் வேளச்சேரி நலச்சங்கங்களில் உள்ள, தன்னார்வலர்கள் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டனர். இதில், சிறுவர் - சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பெருங்குடி - வேளச்சேரி ரயில்வே சாலை மைய தடுப்பு பகுதியிலும், மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து, இதுவரை 2,000 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.ஒவ்வொரு வாரமும், மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தண்ணீர் ஊற்ற, தனியாக தொட்டியும் கட்டி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X