பொது செய்தி

தமிழ்நாடு

நுாலக வரி ரூ.54 கோடி பாக்கி இழுத்தடிக்கும் உள்ளாட்சிகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
தாம்பரம் : நுாலக வரி பாக்கி வழங்காமல், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகள் இழுத்தடிப்பதால், 54.27 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் உள்ள பொது நுாலகத் துறையின் செலவுகளுக்காக, உள்ளாட்சிகளின் வழியாக பொது மக்களிடம் 6 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.ஆனால், வசூலித்த தொகையை நுாலகத் துறைக்கு வழங்காமல், பல புறநகர் உள்ளாட்சிகள்

தாம்பரம் : நுாலக வரி பாக்கி வழங்காமல், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகள் இழுத்தடிப்பதால், 54.27 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள பொது நுாலகத் துறையின் செலவுகளுக்காக, உள்ளாட்சிகளின் வழியாக பொது மக்களிடம் 6 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.ஆனால், வசூலித்த தொகையை நுாலகத் துறைக்கு வழங்காமல், பல புறநகர் உள்ளாட்சிகள் இழுத்தடிக்கின்றன. 2010 முதல் 2017 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான நுாலகங்களின் செலவுகளுக்கும், நுாலக பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றிற்கும், நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக, மேற்குறிப்பிட்ட இந்த ஏழு ஆண்டுகளுக்கும் சேர்த்து, தாம்பரம் நகராட்சி 5.55 கோடி ரூபாயும், செம்பாக்கம் நகராட்சி 1.32 லட்சம் ரூபாயும் நுாலக வரி பாக்கி வழங்க வேண்டி உள்ளது.

அதேபோல், பரங்கி மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் சேர்த்து 1.88 கோடி ரூபாய் வரி பாக்கி நிலுவையில் உள்ளது.அதே நேரம், குன்றத்துார் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகள், மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்ற தகவலை அளிக்கவில்லை.ஒட்டுமொத்தமாக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து 54.27 கோடி ரூபாய் நுாலக வரி பாக்கி உள்ளதாக, நுாலக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X