பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் கைவரிசை காட்டிய திருட்டு கும்பல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பல்லாவரம் : புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர்; 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை புறநகர் பகுதிகளில், சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர்.இவர்கள் செயின் பறிப்பு குறித்து, நான்கு மாதங்களாக தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பல்லாவரம் : புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர்; 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில், சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர்.இவர்கள் செயின் பறிப்பு குறித்து, நான்கு மாதங்களாக தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, செயின் பறிப்பு கும்பலை சேர்ந்த மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர்கள், கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கரன், 26, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ராபர்ட், 23, குரோம்பேட்டையைச் சேர்ந்த லினால்ட் ஜேம்ஸ், 25, என்பது தெரியவந்தது.இதில், முக்கிய குற்றவாளி சிவசங்கரன். இவர், நண்பர்களை சேர்த்துக்கொண்டு, புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், பின், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம், பம்மல், அண்ணா நகரைச் சேர்ந்த, தமிழ்செல்வி, 55, என்பவரிடம் இந்த கும்பல் ௩ சவரன் செயின் பறித்துள்ளது.மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 20 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X