நிறுத்தம் இருந்தும் நிற்காத பேருந்துகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : குரோம்பேட்டையில், தனியாக நிறுத்தம் இருந்தும் பேருந்துகள் நிற்காததால், ஜி.எஸ்.டி., சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லுாரி சந்திப்பு அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் இயங்கி வந்தது. தாம்பரத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கு நின்று செல்கின்றன.அதனால், அந்த சந்திப்பில் நாள்தோறும்,
 நிறுத்தம் இருந்தும் நிற்காத பேருந்துகள்

குரோம்பேட்டை : குரோம்பேட்டையில், தனியாக நிறுத்தம் இருந்தும் பேருந்துகள் நிற்காததால், ஜி.எஸ்.டி., சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லுாரி சந்திப்பு அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் இயங்கி வந்தது. தாம்பரத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கு நின்று செல்கின்றன.அதனால், அந்த சந்திப்பில் நாள்தோறும், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களும், மாணவர்களும் பெரும் சிரமப்பட்டு வந்தனர். சாலையில் பேருந்துகளை நிறுத்துவதாலேயே நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, நிறுத்தத்தை சில மீட்டர் துாரம் தள்ளி அமைத்தனர்.

புதிய இடத்தில் பேருந்துகளை நிறுத்தியதால் நெரிசலும், பொதுமக்கள் சாலையிலேயே நிற்பதும் குறைந்தது.இந்நிலையில், வழக்கம்போல் பேருந்துகளை சாலையிலேயே நிறுத்துவது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால், வைஷ்ணவா சந்திப்பில் குறைந்திருந்த நெரிசல், மீண்டும் அதிகரித்துவிட்டது. அருகே, போக்குவரத்து காவல் உதவி மையம் இயங்கி வந்தும் இதை தடுக்க முடியவில்லை.இரு சக்கர வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், பேருந்து ஓட்டுனர்களின் அடாவடியை கைக்கட்டியபடி வேடிக்கை பார்ப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே, நடவடிக்கை எடுப்பர் என தெரிகிறது. எனவே, போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X