கழிவு நீர் கால்வாயான வடிகால்: குடியிருப்பில் சுகாதார சீர்கேடு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அம்பத்துார்-பல கோடி ரூபாய் செலவில் மழை நீருக்காக கட்டப்பட்ட வடிகால், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், கழிவு நீர் கால்வாயாக மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், 89, 90, 91, 92 வார்டுகளை இணைக்கும் வகையில், பல கோடி ரூபாய் செலவில், 40 அடி அகலம், 15 அடி ஆழம் கொண்ட மழை நீர் வடிகால், கான்கிரீட் தடுப்பு சுவருடன்

அம்பத்துார்-பல கோடி ரூபாய் செலவில் மழை நீருக்காக கட்டப்பட்ட வடிகால், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், கழிவு நீர் கால்வாயாக மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், 89, 90, 91, 92 வார்டுகளை இணைக்கும் வகையில், பல கோடி ரூபாய் செலவில், 40 அடி அகலம், 15 அடி ஆழம் கொண்ட மழை நீர் வடிகால், கான்கிரீட் தடுப்பு சுவருடன் அமைக்கப்பட்டது.அவதிஅம்பத்துார், மண்ணுார்பேட்டை, தொழிற்பேட்டை, பாடி, முகப்பேர் சுற்றுவட்டாரங்களில் கிடைக்கும் மழை நீர், குடியிருப்புகளை பாதிக்காமல், கூவம் ஆற்றுக்குள் செல்ல வசதியாக, மேற்கண்ட வடிகால் அமைக்கப்பட்டது.ஆனால், சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்யாததால், அம்பத்துார் சுற்றுவட்டார கழிவு நீர் அனைத்தும், அந்த மழை நீர் வடிகால் மூலம் கூவத்தில் பாயும் நிலைக்கு மாறியது. இதனால், வடிகாலில், திடக்கழிவுகள் தேங்கி, கொசு உற்பத்தி, துர்நாற்றம் என அங்குள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர்.கொரோனா பணி, ஊரடங்கை காரணமாக்கி கடந்த, 2 ஆண்டாக வடிகால் துார் வாரப்படவில்லை. மேற்கண்ட சுகாதார சீர்கேட்டால் இப்போது நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. மேலும், முகப்பேர் ஜீவன் பீமா நகரில், 27 முதல் 48வது பிளாக் வரை அந்த வடிகால்வாய், தனியாரின் ஆக்கிரமிப்புகளால் 15 அடியாக சுருங்கி விட்டது.இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின், 944 வீடுகளில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதில், அந்த வடிகால் அருகில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சுகாதார சீர்கேட்டால் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.தவிர்ப்புஇதுகுறித்து ஜீவன் பீமா நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:சுகாதார சீர்கேடு பிரச்னையால், 10 ஆண்டுகளாக மன உளைச்சலுக்கும் ஆளாகி தவிக்கிறோம். ஒரு சில இடங்களில் குடிநீர் வாரியமே, குழாய் மூலம் நேரடியாக கழிவு நீரை மழை நீர் வடிகாலில் விடுகிறது.இது குறித்து, அனைத்து அரசு அதிகாரிகளிடமும் தெளிவுபடுத்தி விட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பருவ மழைக்கு முன் இந்த வடிகாலின் அனைத்து பகுதியையும் துார் வாரி, சுகாதார சீர்கேடை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X