பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: செப்.,1,2ம் தேதியிலும் தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை---சென்னையில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்த நிலையில், வரும் 1, 2ம் தேதியிலும் மிதமான மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் மேற்கு பருவக் காற்று தீவிரம் அடைந்துள்ளது.இதன் காரணமாக,

சென்னை---சென்னையில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்த நிலையில், வரும் 1, 2ம் தேதியிலும் மிதமான மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் மேற்கு பருவக் காற்று தீவிரம் அடைந்துள்ளது.இதன் காரணமாக, இன்று வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும். நாளை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். வரும் 1, 2ம் தேதிகளில், வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



எச்சரிக்கை

கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்று வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.நேற்று முன்தினம் மாலை முதல், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் திடீர் மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை, நேற்று மாலை வரை சாரலாக தொடர்ந்தது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் செம்மஞ்சேரி சத்தியபாமா பல்கலை மற்றும் ஊட்டி அவலாஞ்சியில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.சின்னக்கல்லார் 8, நடுவட்டம் 7, கேளம்பாக்கம் 6, சோழிங்கநல்லுார், காவேரிப்பாக்கம், தேவலா, வால்பாறை 5, சோழவரம் 4, சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கம் 3, தென்காசி, செஞ்சி, பாபநாசம், ஸ்ரீபெரும்புதுாரில் 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-ஆக-202111:59:35 IST Report Abuse
vpurushothaman மாமழை போற்றுதும் - மாமழை போற்றுதும்.
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
30-ஆக-202108:19:40 IST Report Abuse
ravikumark Good rains since last year....hoping Chennai and Tamilnadu will have good water this year and next year
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X