பொது செய்தி

தமிழ்நாடு

847 பேருக்குமருத்துவ காப்பீடு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அன்னுார்:கஞ்சப்பள்ளியில், 847 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மத்திய அரசின் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி, கஞ்சப்பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சிவகுமார் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கி பேசுகையில், ''மத்திய அரசின் பிரதம மந்திரி

அன்னுார்:கஞ்சப்பள்ளியில், 847 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மத்திய அரசின் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி, கஞ்சப்பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சிவகுமார் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கி பேசுகையில், ''மத்திய அரசின் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக, பல லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில், ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம். அட்டை இல்லாதவர்கள் பா.ஜ., நிர்வாகிகளை தொடர்பு கொண்டால், இலவசமாக காப்பீடு திட்ட அட்டை வழங்கப்படும்,'' என்றார்.ஓ.பி.சி., அணி ஒன்றிய துணை தலைவர் தங்கராஜ், சக்தி கேந்திர பொறுப்பாளர் செந்தில், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் குணசேகரன், பொருளாளர் பிரசாந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X