கொரோனா அதிகரிக்கும் நேரத்திலும், எதிர்ப்பு அரசியலை அவர்கள் விடவில்லையா...

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மக்கள் நலனை விட, பிரதமர் மோடி எதிர்ப்பில் அதிக நேரம் செலவிடுவதால் தான், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்றாவது அலை ஒன்று வந்தால், முதல்வர் பினராயி விஜயன் அரசு தான் பொறுப்பு.- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்'கொரோனா அதிகரிக்கும் நேரத்திலும், எதிர்ப்பு அரசியலை அவர்கள் விடவில்லையா; கஷ்டம் தான். நோயை
கொரோனா அதிகரிக்கும் நேரத்திலும், எதிர்ப்பு அரசியலை அவர்கள் விடவில்லையா...

மக்கள் நலனை விட, பிரதமர் மோடி எதிர்ப்பில் அதிக நேரம் செலவிடுவதால் தான், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்றாவது அலை ஒன்று வந்தால், முதல்வர் பினராயி விஜயன் அரசு தான் பொறுப்பு.
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'கொரோனா அதிகரிக்கும் நேரத்திலும், எதிர்ப்பு அரசியலை அவர்கள் விடவில்லையா; கஷ்டம் தான். நோயை கட்டுப்படுத்துவதற்குப் பதில், சுகாதாரத் துறை அமைச்சரை அவர்கள் மாற்றி வருகின்றனர். அதனால் தானோ இந்த சிக்கல்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



ஹரியானா மாநிலத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவி விவசாயிகள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.
- தேசியவாத காங்., தலைவர் சரத் பவார்


'விவசாயிக்கு, விவசாயம் செய்வது தான் வேலை. எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு தான், கம்யூ.,க்கள் இருக்கின்றனரே...' என, சொல்லத் துாண்டும் வகையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் அறிக்கை.



பார்லிமென்டில் நான் 99 சதவீத நாட்கள் பங்கேற்றுள்ளேன். 231 கேள்விகள், 110 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். அதற்காக பார்லி.,யில் பலரும் பாராட்டியுள்ளனர்.
- தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார்


'உங்களைப் போன்ற, 'சின்சியர்' எம்.பி.,க்களை கட்சி மேலிடத்திற்கு பிடிக்காதே; அடுத்த முறை வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்...' என, யதார்த்தத்தை கூறத் தோன்றும் வகையில்,தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் அறிக்கை.



தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், தி.மு.க.,வுடனான கூட்டணி தொடரும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பிற கருத்துகள் கூறப்படும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


latest tamil news




'கூட்டணி தொடரும் என நீங்கள் அறிவிக்க தேவையில்லை. உங்கள் கட்சியை தி.மு.க., தொடர்ந்து கூட்டணியில் சேர்த்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்...' என, திருத்தத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.



முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நள்ளிரவு 1:00 மணிக்கு ஒரு நாள் அழைப்பு வருகிறது. இன்னொரு நாள் அதிகாலை 3:00 மணிக்கு வருகிறது. அவர் எப்போது தான் துாங்குவார் என்பதே தெரியவில்லை. அவர் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்.
- தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் வேலு


'விபரமான பல அமைச்சர்கள் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு துாங்க முடியுமா? துாக்கி சாப்பிட்டு விடக் கூடாது என எண்ணி, 24 மணி நேரமும் முதல்வர் விழிப்புடன் இருக்கிறாரோ என்னவோ...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் வேலு பேச்சு.



பா.ஜ., பிரமுகர்களின் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் போலும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னிஅரசு


'தமிழக பா.ஜ.,வுக்கு இது தர்மசங்கடமான நேரம் தான் போலும்... இனிமேலாவது கட்சியின் முன்னணியினர் சரியாக இருக்க வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னிஅரசு அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202107:59:09 IST Report Abuse
அப்புசாமி கேரள அரசால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியகை. ஒன்றிய அரசு கைதட்டி, வெளக்கேத்தி முதல் அலையையும்,பறந்து பறந்து வந்து இரண்டாம் அலையையும் கட்டுப்படுத்தின லட்சணம் நாடே அறியும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202119:11:45 IST Report Abuse
sankaseshan முத்தரசன் மாதிரி டுபாக்கூர் கம்யூனிஸ்ட்களை பார்க்க முடியாது காலமான cpi தலைவர் KTK தங்கமணியின் பெயர்த்தி கோதை நாச்சியார் BJP யில் சேர்ந்திருக்கிறார் PM ஐ பாராட்டி உள்ளார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202118:58:38 IST Report Abuse
sankaseshan திமுக காரன் பெண்களை மதிக்காது ஒவ்வொருத்தனுக்கும் 2,3 பொண்டாட்டி மனைவி ,துணைவி , இணை வி என்று பெயர் சொல்லுவான்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
30-ஆக-202121:15:07 IST Report Abuse
Dhurveshமேதாவி முருகனுக்கு வள்ளி தெய்வயானை / கிருஷ்ணருக்கு பாமா ருக்குமணி அப்புறம் என்ன , பஞ்ச பாண்டவருக்கு ஒரு மனைவி இப்படி எல்லாம் இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X