பொது செய்தி

தமிழ்நாடு

காத்து வேகமா வீசுனா அவ்வளவு தான்...

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம் உட்பட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பேனர் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.சாலையின் எந்த ஒரு பகுதியிலும், விளம்பர பலகைகள் வைக்க கூடாது என, ஐகோர்ட் அறிவுறுத்தி இருந்தும், அதை காற்றில் பறக்க விட்டு, உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி, மேட்டுப்பாளையம் ரோட்டில் பல
 காத்து வேகமா வீசுனா அவ்வளவு தான்...

பெ.நா.பாளையம்:கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம் உட்பட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பேனர் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.சாலையின் எந்த ஒரு பகுதியிலும், விளம்பர பலகைகள் வைக்க கூடாது என, ஐகோர்ட் அறிவுறுத்தி இருந்தும், அதை காற்றில் பறக்க விட்டு, உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி, மேட்டுப்பாளையம் ரோட்டில் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாடி, நான்கு மாடி கட்டடங்களின் மேலே போதிய பாதுகாப்பின்றி, பிரம்மாண்டமான அளவில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும் காற்று வீசினால் பேனர்கள் சரிந்து விழுந்தால், சாலையில் செல்வோருக்கு ஆபத்தாக அமையும்.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகள் அமைக்க அனுமதி இல்லை. ஆனால், இதையும் மீறி பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தாலும், உள்ளாட்சி நிர்வாகத்திடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு முரணான மற்றும் அனுமதியற்ற விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ' விளம்பர பேனர்கள் வைக்க எங்களிடம் யாரும் அனுமதி பெறவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறி, சிலர் பேனர் வைத்துள்ளனர். ஆய்வு செய்து, அவ்வாறு வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்படும். நோட்டீஸ் கொடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற, துடியலுார் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், உள்ளாட்சி, வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X