பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உரம் இருக்க ரசாயனம் எதற்கு...!

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்;'மண்புழு உரம் உற்பத்தி செய்வதால், ரசாயன உரத்தின் தேவையை தவிர்க்கலாம்' என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு, மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி கீரணத்தத்தில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்து பேசுகையில், ''எஸ். எஸ்.குளம் வட்டாரத்தில், சோளம் மற்றும்

கோவில்பாளையம்;'மண்புழு உரம் உற்பத்தி செய்வதால், ரசாயன உரத்தின் தேவையை தவிர்க்கலாம்' என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு, மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி கீரணத்தத்தில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்து பேசுகையில், ''எஸ். எஸ்.குளம் வட்டாரத்தில், சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு வரும், 31ம் தேதி கடைசி நாள். அதற்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்,'' என்றார்.ஈஷா வேளாண் அறக்கட்டளையின் முத்துக்குமார் பேசுகையில், ''இயற்கை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. மண்புழு உரம் தயாரிப்பது எளிது. அரசு மானியமும் உண்டு.தோட்டத்துக்கு தேவை போக மீதமுள்ள மண்புழு உரத்தை விற்பதன் வாயிலாக அதிலும் வருமானம் பெறலாம். மண்புழு உரத்தை பயன்படுத்துவதால், ரசாயன உரங்களை தவிர்க்கலாம். மகசூல் செலவு குறையும். பயிர்களில் ரசாயன கலப்பு இருக்காது.இத்துடன் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும்,'' என்றார்.பயிற்சி ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண் அலுவலர் தனலட்சுமி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X