பொது செய்தி

தமிழ்நாடு

கூடைப்பந்து பயிற்சி காரமடையில் துவக்கம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடையில் தனியார் பள்ளியில், ஒரு மாத இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் துவங்கியது.கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம், காரமடை ரோட்டரி சங்கம், எஸ்.வி.ஜி.வி., பள்ளி நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து, ஒரு மாத கூடைப்பந்து இலவச பயிற்சி முகாமை, பள்ளி வளாகத்தில் துவங்கியது. பள்ளி நிர்வாக அறங்காவலர் லோகுமுருகன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க தலைவர் ஞானசேகரன் பயிற்சி
 கூடைப்பந்து பயிற்சி காரமடையில் துவக்கம்

மேட்டுப்பாளையம்:காரமடையில் தனியார் பள்ளியில், ஒரு மாத இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் துவங்கியது.கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம், காரமடை ரோட்டரி சங்கம், எஸ்.வி.ஜி.வி., பள்ளி நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து, ஒரு மாத கூடைப்பந்து இலவச பயிற்சி முகாமை, பள்ளி வளாகத்தில் துவங்கியது. பள்ளி நிர்வாக அறங்காவலர் லோகுமுருகன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க தலைவர் ஞானசேகரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க துணை கவர்னர் டாக்டர் விஜயகிரி, மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் செயலாளர் பாலாஜி, விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், திட்டத் தலைவர் பழனிசாமி, ராஜேந்திரன், சசிகலா, குருசரண் ஆகியோர் பங்கேற்றனர்.தினமும் காலை, 6:30 மணிக்கு துவங்கி, 8:00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. இதில், 5 கல்லுாரிகள், 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பள்ளி முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X