பொது செய்தி

தமிழ்நாடு

அப்பாடா... வந்ததே நிம்மதி...! தடுப்பூசி போட இனி பிரச்னையில்லை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சூலுார்;சூலுார் அரசு மருத்துவமனை, 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சூலுார் வட்டாரத்தில், இருகூர், சோமனூர், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மேலும், சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தினமும் சுகாதாரத்துறையினர்

சூலுார்;சூலுார் அரசு மருத்துவமனை, 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சூலுார் வட்டாரத்தில், இருகூர், சோமனூர், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மேலும், சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தினமும் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், இருகூர் உட்பட பேரூராட்சி பகுதிகளுக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாகவும், சூலுாருக்கு குறைந்தளவே தடுப்பூசி ஒதுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் சூலுார் பேரூராட்சியில், 5,000ம் பேருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதற்கிடையில், 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் மையங்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.அதனடிப்படையில், சூலுார் அரசு மருத்துவமனை, 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் மையமாக அறிவிக்கப்பட்டது.நேற்று முதல் இம்மையம் செயல்படத் துவங்கியது. முதல் கட்டமாக, 850 பேருக்கு நேற்று தடுப்பூசிகள் போடப்பட்டன. இதனால், சூலுார் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'இதுவரை தடுப்பூசிக்காக பல இடங்களுக்கு அலைந்தோம். தற்போது, சூலுார் மருத்துவமனை, 24 மணி நேரம் தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், சூலூர் பேரூராட்சி மட்டுமில்லாமல் அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி மக்களும் இதன் வாயிலாக பயன்பெறுவர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X