கோவை, சேலம் அணிகள் இன்று யாருக்கு வெற்றி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, சேலம் அணிகள் இன்று யாருக்கு வெற்றி

Added : ஆக 30, 2021
Share
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையம், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், வணிகவரித்துறை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல்நாள் போட்டியை வணிகவரித்துறை துணை ஆணையர்கள் முருககுமார், அருணாச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளில், கோவை, ஈரோடு மற்றும் சேலம் வணிகவரித்துறை அணிகள் கலந்து கொண்டன.முதல் நாள் போட்டியில், கோவை ராயல்

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையம், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், வணிகவரித்துறை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல்நாள் போட்டியை வணிகவரித்துறை துணை ஆணையர்கள் முருககுமார், அருணாச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளில், கோவை, ஈரோடு மற்றும் சேலம் வணிகவரித்துறை அணிகள் கலந்து கொண்டன.முதல் நாள் போட்டியில், கோவை ராயல் ஸ்டிரைக்கர்ஸ் அணி, 25 ஓவர்களில், 156 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஈரோடு மஞ்சள் வாரியார் அணி, 156 ரன்கள் எடுத்ததால், 'டிரா' ஆனது. நேற்று நடந்த இரண்டாம் நாள் போட்டியில், 137 ரன்கள் எடுத்த சேலம் அணி, ஈரோடு அணியை தோற்கடித்தது. இன்று காலை, கோவை, சேலம் அணிகளுக்கிடையே போட்டி நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X