பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கால்பந்து போட்டி: 'மலை' அணிகளுக்கு 'மாலை'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த கால்பந்து போட்டியில், முதல் நான்கு இடங்களையும் நீலகிரி மாவட்ட அணிகள் பெற்றன.மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடந்தன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றன. தலைமை வகித்த சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் போட்டிகளை துவக்கி வைத்தார். இரண்டு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த கால்பந்து போட்டியில், முதல் நான்கு இடங்களையும் நீலகிரி மாவட்ட அணிகள் பெற்றன.மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடந்தன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றன. தலைமை வகித்த சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் போட்டிகளை துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் போட்டிகள் நடந்தன.கோத்தகிரியை சேர்ந்த புல்சன் எப்சி அணி முதலிடம், கெட்சி கட்டு அணி 2ம் இடம், லோட்டஸ், 3வது இடம், கேர்ஸ் 4-வது இடத்தை பெற்றன. அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. இந்த நான்கு அணிகளும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X