ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் திட்டம்: ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் திட்டம்: ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை

Added : ஆக 30, 2021
Share
பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள மூன்று ஊராட்சிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது, தங்கள் எல்லைக்குட்பட்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கையாள்வதாகும்.சுற்றுச்சூழலுக்கு பாதகமின்றி, கழிவுகளை கையாள, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது.
 ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் திட்டம்: ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை

பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள மூன்று ஊராட்சிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது, தங்கள் எல்லைக்குட்பட்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கையாள்வதாகும்.சுற்றுச்சூழலுக்கு பாதகமின்றி, கழிவுகளை கையாள, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து மறு சுழற்சி செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.திட்டத்தில், அவ்வப்போது மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் ஒன்றாக, கழிவுகளை உரமாக மாற்றி விற்பனை செய்து, உள்ளாட்சிக்கு வருவாய் ஈட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, கழிவுகள் அழிக்கப்படுவதுடன், வருவாயும் ஈட்ட முடியும்.தற்போது, அத்திட்டத்தில் சில மேம்பாடுகள் செய்யப்பட்டு, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டம், ஊராட்சிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.தெற்கு ஒன்றியத்தில் மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம் ஊராட்சிகளிலும், வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிபட்டி ஊராட்சியிலும், முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தில், தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை இயந்திரத்தால் துகளாக்கி, விரைவில் மக்கி, நொதிக்க வைக்கும் நுண்ணுயிர்களை கலந்து, படிப்படியாக மக்க வைத்து, சத்து மிக்க நுண்ணுயிர்கள் நிறைந்த உரமாக மாற்றி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, கழிவுகளை துகளாக்கும் இயந்திரம், பல்வேறு நிலைகளில் மக்க வைக்கும் தொட்டிகளுடன் கூடிய கொட்டகை அமைக்கப்படுகிறது. இதன் திட்ட மதிப்பு, தலா, 20 லட்சம் ரூபாயாகும். விரைவில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X