மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 30, 2021
Share
உடுமலை:உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை அருகேயுள்ள அமராவதி நகர் பள்ளியில், திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, உடுமலை வட்ட, சட்ட பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா மறு வாழ்வு நிவாரண பொருட்கள் வழங்கும் முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும்

உடுமலை:உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை அருகேயுள்ள அமராவதி நகர் பள்ளியில், திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, உடுமலை வட்ட, சட்ட பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா மறு வாழ்வு நிவாரண பொருட்கள் வழங்கும் முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் குழு தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் பேசுகையில், '' மலைவாழ் மக்களுக்கு அரசுத்துறைகளுடன் இணைந்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்,'' என்றார்.மாவட்ட நீதிபதி சுகந்தி பேசுகையில், ''மலைவாழ் மக்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும்; இடை நிற்றல் இல்லாமல், உயர் கல்வி படித்தால், நல்ல வாய்ப்புகள் உள்ளது. அதே போல், சிறு வயது திருமணங்களும் செய்து வைக்க வேண்டாம்,'' என்றார்.நீதிபதிகள், புகழேந்தி, பிரஷ்ணேவ், உதவி கலெக்டர் அல்தாப் ரசூல், உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், வக்கீல் சங்க தலைவர் ஸ்ரீதர், கோட்டாட்சியர் கீதா, டி.எஸ்.பி., தேன்மொழி வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற அரசு நலத்திட்ட உதவிகளும், கொரோனா மறு வாழ்வுக்கான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X