பொது செய்தி

இந்தியா

கோவிட்: இந்தியாவில் மேலும் 34 ஆயிரம் பேர் நலம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 34 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3.19 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,763 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 34 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3.19 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,763 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.76 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 380 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,38,210 ஆனது.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.15 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 30) காலை 8 மணி நிலவரப்படி 63.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 31,14,696 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஆகஸ்ட் 30-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 21 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 15 ஆயிரத்து 053 பேர் பலியாகினர். 19 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 330 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X