பொது செய்தி

தமிழ்நாடு

2வது முறையாக நிரம்பிய சோலையாறு அணை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வால்பாறை:தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டில் சோலையாறு அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை, 23ம் தேதி நிரம்பியது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதே போல் காடம்பாறை அணை நிரம்பியதும், மேல்ஆழியாறு அணை
 2வது முறையாக நிரம்பிய சோலையாறு அணை

வால்பாறை:தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டில் சோலையாறு அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை, 23ம் தேதி நிரம்பியது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதே போல் காடம்பாறை அணை நிரம்பியதும், மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.கடந்த வாரம் மழைப்பொழிவு குறைந்ததால், சோலையாறு அணையின் நீர்மட்டம், கடந்த, 24ம் தேதி, 159.85 அடிக்கு சரிந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையினால், நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.மேல்நீராறு அணையிலிருந்து, வினாடிக்கு, 1,424 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 126 கனஅடி தண்ணீர் வீதம் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், சோலையாறு அணை நீர்மட்டம் நேற்று காலை, 161.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,881 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இரண்டாவது முறையாக சோலையாறு அணை நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 34, சோலையாறு - 41, மேல்நீராறு - 76, கீழ்நீராறு - 45, பரம்பிக்குளம் - 15, ஆழியாறு - 4, மேல்ஆழியாறு - 76, காடம்பாறை - 10,பெருவாரிப்பள்ளம் - 10, வேட்டைக்காரன்புதுார் - 14, மணக்கடவு - 6, துணக்கடவு - 8, சர்கார்பதி - 10, நவமலை - 2, பொள்ளாச்சி - 8.4.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X