பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வருவோருக்கு அச்சமில்லை: தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.ஊரடங்கு தளர்வுகளால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில், நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர் 'மாஸ்க்' அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கமலும்
 சுற்றுலா வருவோருக்கு அச்சமில்லை: தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு

வால்பாறை:வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.ஊரடங்கு தளர்வுகளால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில், நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர் 'மாஸ்க்' அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கமலும் சுற்றுகின்றனர். இதனால், வால்பாறையில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஆழியாறு சோதனைச்சாவடியில் பெயரளவுக்கு சோதனை செய்து அனுமதிக்கின்றனர்.அதிகாரிகளின் நடவடிக்கையை, மாவட்ட கலெக்டர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்ளிட்ட யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் விதிமுறை மீறி சுற்றுலாபயணிகள் அதிக அளவில் வால்பாறையில்திரள்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் தான் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.சுற்றுலா பயணிகளால் வால்பாறையில் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க, இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை, சோதனைச்சாவடியில் காண்பித்த பிறகே வால்பாறைக்கு அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X